அல்லைப்பிட்டி விபத்தில் உயிரிழந்த யுவதிகளின் விபரங்கள் வெளியாகின!!
யாழ் அல்லைப்பிட்டியில் நேற்றுமாலை வான், மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான இரு இளம் பெண்களும் அடையாளம் காணப்பட்டனர். மானிப்பாய் ரஞ்சித் மோட்டோர்ஸ் ஊழியர்களே உயிரிழந்துள்ளனர். கோப்பாயை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (26), மானிப்பாயை சேர்ந்த கீதரட்ணம் திவ்யா (31) ஆகியோரே உயிரிழந்தனர்.… The post அல்லைப்பிட்டி விபத்தில் உயிரிழந்த யுவதிகளின் விபரங்கள் வெளியாகின!! appeared first on Jaffna News. All rights reserved..

யாழ் அல்லைப்பிட்டியில் நேற்றுமாலை வான், மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான இரு இளம் பெண்களும் அடையாளம் காணப்பட்டனர்.
மானிப்பாய் ரஞ்சித் மோட்டோர்ஸ் ஊழியர்களே உயிரிழந்துள்ளனர்.
கோப்பாயை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (26), மானிப்பாயை சேர்ந்த கீதரட்ணம் திவ்யா (31) ஆகியோரே உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம், ஊர்கவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டி சந்திக்கு அண்மையாக உள்ள வளைவில் நேற்று மாலை 4 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
ஊர்காவற்றுறையிலிருந்து வந்த கார், வீதியின் மத்திய வெள்ளைக் கோட்டை கடந்து எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதிகள் இருவரும் உயிரிழந்தனர்.
கார் தடம்புரண்டதில், காரில் பயணித்த வடமராட்சி, பருத்தித்துறையை சேர்ந்த சிவசுப்ரமணியம் சுதாகரன், கருணாமூர்த்தி விமலாதேவி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
Google News
ஏனைய தளங்களிற்கு செல்ல..
உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
The post அல்லைப்பிட்டி விபத்தில் உயிரிழந்த யுவதிகளின் விபரங்கள் வெளியாகின!! appeared first on Jaffna News. All rights reserved..