ஆசிரியர்களை அச்சுறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை : இலங்கை ஆசிரியர் சங்கம்!

ஆசிரியர்களை அச்சுறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை : இலங்கை ஆசிரியர் சங்கம்! கல்வியை கட்டாய சேவையாக்கவோ, அவசரகாலத்தின் கீழ் பரீட்சை குழுவை அமர்த்தவோ, பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதிலிருந்து விலகும் ஆசிரியர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவோ அல்லது அவர்களது சொத்துக்களை அபகரிக்கவோ ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கை அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படுவதாகவும் […]

ஆசிரியர்களை அச்சுறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை : இலங்கை ஆசிரியர் சங்கம்!

ஆசிரியர்களை அச்சுறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை : இலங்கை ஆசிரியர் சங்கம்!

கல்வியை கட்டாய சேவையாக்கவோ, அவசரகாலத்தின் கீழ் பரீட்சை குழுவை அமர்த்தவோ, பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதிலிருந்து விலகும் ஆசிரியர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவோ அல்லது அவர்களது சொத்துக்களை அபகரிக்கவோ ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கை அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆசிரியர்களின் பிரச்சினையை விவாதம் மூலம் தீர்க்காமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களை அச்சுறுத்திய ஜனாதிபதி, இவற்றைச் செய்வதால், இந்த மக்களையும் அச்சுறுத்த முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இதுவரை விநியோகிக்கப்படவில்லை, பாடசாலை சீருடைகள் முறையாக விநியோகிக்கப்படவில்லை. கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றும் நிலை ஜனாதிபதிக்கு இருந்தால் மேற்கண்ட குறைபாடுகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்தை அடக்குமுறை நடவடிக்கையாகவே பார்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company