இன்றைய ராசிபலன் (20.04.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

இன்றைய ராசிபலன் (20.04.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன்.. மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் நபர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் பொறுமைக்கும் ஒரு அளவு இருப்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும். ஆரோக்கியம் வலுப்பெறும். ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சந்திக்க இருக்கும் சில விஷயங்கள் முன்பே உங்களுக்கு சந்தித்த உணர்வை ஏற்படுத்தும். கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் […]

இன்றைய ராசிபலன் (20.04.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

இன்றைய ராசிபலன் (20.04.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?இன்றைய ராசிபலன்..

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் நபர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் பொறுமைக்கும் ஒரு அளவு இருப்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும். ஆரோக்கியம் வலுப்பெறும்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சந்திக்க இருக்கும் சில விஷயங்கள் முன்பே உங்களுக்கு சந்தித்த உணர்வை ஏற்படுத்தும். கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களுடன் அனுசரணையுடன் இருப்பது நல்லது.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புணர்வு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணிய எண்ணங்கள் ஈடேற வாய்ப்பு உண்டு. சுப காரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் கண் முன் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும் இதனால் டென்ஷன் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை ஊதி பெரிதாக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதம் ஆகலாம் எனவே பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் வாக்குவாதங்கள் தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணவரவு கணிசமாக புழங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய திறமைகளை நிரூபிக்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுதந்திரமான சிந்தனை இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை புகுத்தக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் முன் கோபம் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானத்தை கையாளுவது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகை வளரும் கவனம் வேண்டும். ஆரோக்கிய பாதிப்புகளில் அலட்சியம் வேண்டாம்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நல்ல நாளாக இருக்கப் போகிறது. சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேராசை பெருநஷ்டம் ஆகலாம்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமயோசித புத்தியுடன் நடந்து கொள்வது நல்லது. உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு சிலர் உபத்திரவம் செய்வார்கள். கணவன் மனைவிக்குள் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணியது ஈடேறும்.

மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொட்டது துலங்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறைய ஆரம்பிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இறை சிந்தனை அதிகரிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களிடம் பரிவுடன் பேசியதையும் சாதிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company