உதவி எனும் பெயரில் 16 வயது சிறுமியை தாயாக்கி, அவள் குடும்பத்தை நாசமாக்கிய நாய் இது

கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதாகக் கூறி ஒரு குடும்பத்திற்கு உதவி செய்து வந்துள்ளான் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் தனஞ்சயன். யாழ் தீவகப்பகுதியைச் சேர்ந்த இவன் வவுனியாவில் 6 வருடங்களாக கட்டட நிறுவனம் ஒன்றில் ஜேசிபி சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளான். கடந்த சில வருடங்களுக்கு முன் சுவிஸ்லாந்தில் விவாகரத்தான தன்னிலும் விட 6 வயது கூடிய வவுனியாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்து ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னரே சுவிஸ்லாந் சென்றான். அங்கு […] The post உதவி எனும் பெயரில் 16 வயது சிறுமியை தாயாக்கி, அவள் குடும்பத்தை நாசமாக்கிய நாய் இது appeared first on Jaffna News.

உதவி எனும் பெயரில் 16 வயது சிறுமியை தாயாக்கி, அவள் குடும்பத்தை நாசமாக்கிய நாய் இது
கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதாகக் கூறி ஒரு குடும்பத்திற்கு உதவி செய்து வந்துள்ளான் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் தனஞ்சயன்.

யாழ் தீவகப்பகுதியைச் சேர்ந்த இவன் வவுனியாவில் 6 வருடங்களாக கட்டட நிறுவனம் ஒன்றில் ஜேசிபி சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளான்.

கடந்த சில வருடங்களுக்கு முன் சுவிஸ்லாந்தில் விவாகரத்தான தன்னிலும் விட 6 வயது கூடிய வவுனியாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்து ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னரே சுவிஸ்லாந் சென்றான். அங்கு சென்ற பின்னர் வவுனியா மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் செயற்படும் உள்ளூர் பேஸ்புக் பிரபலங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட சில பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கு உதவி செய்வதாக கூறி குறித்த பெண்களின் தொடர்புகளைள எடுத்துள்ளான்.

அதன் பின்னர் கடந்த வருட முற்பகுதியில் சுவிஸ்லாந்திலிருந்து வந்து கிளிநொச்சியில் இறுதி யுத்தத்தில் கணவனை இழந்த இரு பெண் பிள்ளைகளின் 37 வயதான தாயாருக்கு உதவி புரிந்து அதனை உள்ளூர் பிரபலம் ஒன்றின் பேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளான்.

இந் நிலையில் குறித்த தாயாரின் 16 வயதான மூத்த பெண் பிள்ளை கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலையில் படித்து வந்த நிலையில் சில மாதங்களாக பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்த போது குறித்த குடும்பம் கிளிநொச்சியை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளளார்கள்.

குறித்த மாணவியின் வகுப்பாசிரியர் இது தொடர்பாக ஆராய்ந்த போது மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததை அவதானித்ததாக மாணவியின் அயல்வீட்டார் கூறியுள்ளார்கள். அதன் பின்னர் மாணவியின் நண்பிகள் மற்றும் உறவினர்களை விசாரித்து மாணவியும் குடும்பமும் தலைமறைவான இடத்தை குறித்த ஆசிரியர் கண்டுபிடித்துள்ளார்.

தென்மராட்சி கச்சாய் பகுதியில் வீடு ஒன்றில் கைக்குழந்தையுடன் 16 வயதான அந்த மாணவியும் தாயார் மற்றும் தங்கையையும் ஆசிரியர் கண்டு பிடித்துள்ளார்.

அதன் பின்னர் ஆசிரியர் மேற்கொண்ட விசாரணையின் போதே தனஞ்சயனின் திருவிளையாடல் வெளியாகியுள்ளது. குடும்பத்திற்கு உதவி செய்வதாக கூறி முதல் தடவையாக 50 ஆயிரம் கொடுத்துள்ளான் தனஞ்சயன்.

உதவி எனும் பெயரில் 16 வயது சிறுமியை தாயாக்கி அவள் குடும்பத்தை நாசமாக்கிய நாய் இது

அதன் பின்னர் பல தடவைகள் தொடர்ச்சியாக அவர்களது வீட்டுக்கு காரில் சென்று வந்த தனஞ்சயன் மாணவியை பல தடவைகள் வவுனியாவுக்கு கொண்டு சென்று திரும்ப வீட்டில் இறக்கியுள்ளராம். அதன் போதே மாணவி கர்ப்பமானதாக தாயார் கூறியுள்ளார்.

தனஞ்சயன் சுவிஸ் சென்ற பின்னரே மாணவியின் கர்ப்பம் தனக்கு தெரியவந்தது எனவும் இதனை தனஞ்சயனிடம் கூறிய போதே தங்களுக்கு கச்சாய் பகுதியில் வீடு எடுத்து தந்து யாழ் பலாலி வீதியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பிரசவத்தை பார்க்கச் செய்து அதற்கான சகல செலவையும் தனஞ்செயன் கொடுத்துள்ளானாம். அத்துடன் 2 வருடங்களில் மகளை சுவிஸ்லாந்துக்கு எடுப்பதாகவும் கூறியுள்ளானாம் தனஞ்செயன்…..

குறித்த மாணவி நன்றாக படித்து வந்தவர்.இந்த வருடம் ஓ.எல் பரீட்சை எடுப்பவராவார். அத்துடன் மாணவியின் 14 வயதான தங்கையும் நன்றாகப் படிப்பவர். ஆனாலும் தற்போது பாடசாலைக்கு செல்லாது வீட்டில் இருக்கின்றார்.

இறுதி யுத்தம் முடியும் தறுவாயில் கணவனை இழந்த போது தாயார் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து பிறந்தவராவார்.

இவ்வாறான ஒரு குடும்பத்தை சீரழித்தும் திருந்தாத தனஞ்சயன் தற்போதும் அதே பகுதியில் உள்ள இன்னொரு பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கும் உதவி செய்வது என்ற போர்வையில் சில ஆயிரங்களை அனுப்பிய பின் அந்த குடும்ப தலைவியின் தங்கைக்கு அனுப்பிய புகைப்படமே இதுவாகும்….

இதை விட ஏராளமான நிர்வாணப் புகைப்படங்களையும் தனஞ்செயன் அந்த இளம் பெண்ணுக்கு அனுப்பியுள்ளான். இவனது இந்த செயற்பாடு தொடர்பாக குறித்த ஆசிரியர் அப்பகுதி கிராமசேவகர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

The post உதவி எனும் பெயரில் 16 வயது சிறுமியை தாயாக்கி, அவள் குடும்பத்தை நாசமாக்கிய நாய் இது appeared first on Jaffna News.