ஊருக்கு கிளம்பும் ஆர்ச்சர்; மும்பை அணிக்கு வந்த சோதனை?

ஊருக்கு கிளம்பும் ஆர்ச்சர்; மும்பை அணிக்கு வந்த சோதனை? நடப்பு ஐபிஎல் சீசனில், இங்கிலாந்து நாட்டின் கிறிஸ் ஜோர்டன், ஆர்ச்சருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இங்கிலாந்து நாட்டின் கிறிஸ் ஜோர்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மாற்றாக அவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆர்ச்சருக்கு, […]

ஊருக்கு கிளம்பும் ஆர்ச்சர்; மும்பை அணிக்கு வந்த சோதனை?

ஊருக்கு கிளம்பும் ஆர்ச்சர்; மும்பை அணிக்கு வந்த சோதனை?

நடப்பு ஐபிஎல் சீசனில், இங்கிலாந்து நாட்டின் கிறிஸ் ஜோர்டன், ஆர்ச்சருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இங்கிலாந்து நாட்டின் கிறிஸ் ஜோர்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மாற்றாக அவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆர்ச்சருக்கு, முழங்கை பகுதியில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் உடற்தகுதியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், அவர் நாடு திரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 34 வயதான ஜோர்டன் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 4 ஐபிஎல் அணிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 28 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 2016 முதல் ஐபிஎல் அரங்கில் விளையாடி வரும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார். இங்கிலாந்து அணிக்காக 87 சர்வதேச டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.

சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார், மெஸ்ஸி!

The post ஊருக்கு கிளம்பும் ஆர்ச்சர்; மும்பை அணிக்கு வந்த சோதனை? appeared first on தினவாசல்.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company