ஐபிஎல் துவக்க விழா; நடனமாட தயாராகும் தென்னிந்திய நடிகைகள்!
ஐபிஎல் துவக்க விழா; நடனமாட தயாராகும் தென்னிந்திய நடிகைகள்! ஐபிஎல் தொடரின் துவக்க விழாவில், தென்னிந்திய நடிகைகளான தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடனம் ஆட உள்ளனர். இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமான முறையில் அகமதாபாத் மைதானத்தில் தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வருகிற மே […]

ஐபிஎல் துவக்க விழா; நடனமாட தயாராகும் தென்னிந்திய நடிகைகள்!
ஐபிஎல் தொடரின் துவக்க விழாவில், தென்னிந்திய நடிகைகளான தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடனம் ஆட உள்ளனர்.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமான முறையில் அகமதாபாத் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வருகிற மே 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மான்டமான முறையில் தொடங்கவுள்ள ஐபிஎல் திருவிழாவில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இன்று இரவு துவங்க உள்ள ஐபிஎல் தொடரின் துவக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த துவக்க விழாவில், தென்னிந்திய நடிகைகளான தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடனம் ஆட உள்ளனர்.
மேலும், பிரபல பாடகர் அர்ஜித் சிங், ரசிகர்களுக்கு பாடல்களை பாடி விருந்து படைக்க உள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா நடனமாட உள்ளதால், தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
அதேநேரம் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று துவக்க விழாவிற்கு பிறகு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் களம்காண உள்ளது குறிப்பிடத்தக்கது.
13 ஆண்டு காலமாக தாயின் உடலை மம்மியாக மாற்றி பாதுகாத்த மகன்.. போலந்தில் அதிர்ச்சி
The post ஐபிஎல் துவக்க விழா; நடனமாட தயாராகும் தென்னிந்திய நடிகைகள்! appeared first on தினவாசல்.