கம்பளையில் காணாமல் போன யுவதியின் சடலம் மீட்பு

கம்பளையில் காணாமல் போன யுவதியின் சடலம் மீட்பு கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வர என்ற யுவதியின் சடலம் இன்று சனிக்கிழமை காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த பாத்திமா முனவ்வர என்ற யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். கம்பளை  வெலிகல்ல  எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியாவார். பின்னர் குறித்த யுவதியை கண்டுபிடிக்க […]

கம்பளையில் காணாமல் போன யுவதியின் சடலம் மீட்பு

கம்பளையில் காணாமல் போன யுவதியின் சடலம் மீட்பு

கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வர என்ற யுவதியின் சடலம் இன்று சனிக்கிழமை காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த பாத்திமா முனவ்வர என்ற யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார்.

கம்பளை  வெலிகல்ல  எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியாவார்.

பின்னர் குறித்த யுவதியை கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கிய பொலிஸார்  சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்தனர்.

குறித்த யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும்  அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால்  யுவதியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாகவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் அடிப்படையில் பாத்திமா புதைக்கப்பட்ட இடத்தை நேற்று வெள்ளிக்கிழமை அடையாளம் கண்ட பொலிஸார்  இன்று காலை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அவரது சடலத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

The post கம்பளையில் காணாமல் போன யுவதியின் சடலம் மீட்பு appeared first on Minnal 24 News.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company