சிறந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி

சிறந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி உள்ள10ராட்சிமன்ற தேர்தல் தொடர்ல் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்த சிறந்த தீர்ப்பை உயர்நீதமன்றம் அளித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். உள்ள10ராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசாங்கமானது பாரிய முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் தேர்தல் என்பது அடிப்படை உரிமை என்று பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் நான் தொடர்ச்சியாகக் […]

சிறந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி

சிறந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி

உள்ள10ராட்சிமன்ற தேர்தல் தொடர்ல் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்த சிறந்த தீர்ப்பை உயர்நீதமன்றம் அளித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ள10ராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசாங்கமானது பாரிய முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும் தேர்தல் என்பது அடிப்படை உரிமை என்று பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் நான் தொடர்ச்சியாகக் கூறி வந்தோம்.

மக்களின் அடிப்படை உரிமையை உயர்நீதிமன்றே பாதுகாக்க வேண்டும்.

எவ்வாறான பிரச்சினைகள் வந்தாலும் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்ற மக்களின் நிலைப்பாட்டை நாம் தொடர்ச்சியாகக் கூறிவந்தோம்.

உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது.

ஏனெனில், நீதி அதிகாரம் என்பது பாராளுமன்றத்துக்கு இருப்பதை யாவரும் அறிவர்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தில், தேர்தலுக்காக 10 பில்லியன் ஒதுக்கப்பட்டு இருக்குமேயானால், அதனை நிதி அமைச்சு வழங்காவிட்டால் நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகருக்கு நாம் அறிவுறுத்தினோம்.

எனினும் சபாநாயகர் அதனை செய்யவில்லை.

அரசியல் ரீதியாகவே தீர்மானம் எடுக்கின்றனர். சட்டத்துக்கு அமைவாக அரசாங்கம் தீர்மானம் எடுப்பதில்லை.

தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். அரசாங்கத்தின் அசமந்தப்போக்கை யாரிடம் எடுத்துக்கூறுவது என்று தெரியாத நிலைமை ஏற்பட்டது. இவ்விடயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்தோம்.

எனினும் எமது சகலரதும் எதிர்பார்ப்பை உயர்நீதிமன்றம் நிறைவேற்றியுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் காரணமாகவே உயர்நீதிமன்றத்தால் அவ்வாறான தீர்ப்பொன்றை வழங்க முடிந்தது.

நாம் எமது ஆட்சியில் 19ஆவது திருத்தத்தை கொண்டுவந்த போது நீதிமன்றம் உள்ளிட்ட பல உயர்நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க தொடங்கின.

எனினும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்து பல ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்ததது.

19ஆவது திருத்தத்தை மீள கொண்டுவருமாறு நாம் இரண்டு வருடம் தொடர்ச்சியாக போராடினோம்.

சர்வதேச நிறுவனங்களில் அழுத்தம் காரணமாக 19ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை 21ஆவது திருத்தத்தில் இணைத்துக்கொள்ள முடிந்தது.

நீதமன்றங்கள் சுயாதீனமாக இயங்கக் கூடிய சூழல் ஏற்பட்டது.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company