தனுஷ்க குணதிலக்க பாலியல் வழக்கில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

தனுஷ்க குணதிலக்க பாலியல் வழக்கில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், அவர் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இன்று(28) அவுஸ்திரேலியாவின் டவுனிங் சென்டர் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக சென்றிருந்த போது, பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் […]

தனுஷ்க குணதிலக்க பாலியல் வழக்கில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

தனுஷ்க குணதிலக்க பாலியல் வழக்கில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், அவர் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இன்று(28) அவுஸ்திரேலியாவின் டவுனிங் சென்டர் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக சென்றிருந்த போது, பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனுஷ்க குணதிலக்க மீதான நான்கில் 3 குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.

வழக்கு கடந்த 21 ஆம் திகதி நிறைவு பெற்ற நிலையில், தனுஷ்க குணதிலக்கவை விடுவித்து இன்று(28) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company