தையிட்டிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்! பெண் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விஹாரை பகுதிக்கு கூட்டாக வருகை தந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர்… The post தையிட்டிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்! பெண் உள்ளிட்ட ஐவர் கைது appeared first on Jaffna News. All rights reserved..

தையிட்டிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்! பெண் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விஹாரை பகுதிக்கு கூட்டாக வருகை தந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு விஐயம் செய்து விஹாரையை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடனும் கலந்துரையாடி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (05) யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது.

சமகாலத்தில், காங்கேசன்துறை தையிட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட விஹாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்களால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அவர்களை பாதுகாப்பு தரப்பு முற்றுகையிட்டுள்ளமையை கண்டித்தும், மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநடப்பு செய்வதாக சுமந்திரன் எம்.பி. கூட்டத்தில் அறிவித்தார்.

இதனையடுத்து சக பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் கூட்டாக வெளிநடப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை பகுதிக்கு கூட்டாக வருகை தந்தனர்.

இதேவேளை, வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இன்று (04) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் விஹாரையையும் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் பார்வையிட்டனர்

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மருந்து உணவுப்பொருட்கள் என்பவற்றை உள்ளே கொண்டு வருவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் எடுத்துரைத்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விஹாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்! பெண் உள்ளிட்ட ஐவர் கைது தையிட்டிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்! தையிட்டிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்! தையிட்டிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

The post தையிட்டிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்! பெண் உள்ளிட்ட ஐவர் கைது appeared first on Jaffna News. All rights reserved..