பொலிஸார் மனிதாபிமானற்ற முறையிலேயே நடந்துகொண்டனர் -ஷிரந்த அமரசிங்க

பொலிஸார் மனிதாபிமானற்ற முறையிலேயே நடந்துகொண்டனர் -ஷிரந்த அமரசிங்க தன்னை கைதுசெய்யும்போது பொலிஸார் மனிதாபிமானமற்ற ரீதியிலேயே நடந்துகொண்டதாக சுதந்திரத்தை பாதுகாப்போர் அமைப்பின் தலைவர் ஷிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் திகதி கறுவாத்தோட்டம் பொலிஸார் என்னை கைதுசெய்தனர். கைதுசெய்யவில்லை கைது என்ற பெயரில் என்னை தூக்கிக்கொண்டே சென்றனர். அரசியலமைப்பின் 13ஆவது உறுப்புரையில் ஒருவரை கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படை உரிமை தொடர்பில் கூறப்பட்ட விடயங்களையும் […]

பொலிஸார் மனிதாபிமானற்ற முறையிலேயே நடந்துகொண்டனர் -ஷிரந்த அமரசிங்க

பொலிஸார் மனிதாபிமானற்ற முறையிலேயே நடந்துகொண்டனர் -ஷிரந்த அமரசிங்க

தன்னை கைதுசெய்யும்போது பொலிஸார் மனிதாபிமானமற்ற ரீதியிலேயே நடந்துகொண்டதாக சுதந்திரத்தை பாதுகாப்போர் அமைப்பின் தலைவர் ஷிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி கறுவாத்தோட்டம் பொலிஸார் என்னை கைதுசெய்தனர்.

கைதுசெய்யவில்லை கைது என்ற பெயரில் என்னை தூக்கிக்கொண்டே சென்றனர்.

அரசியலமைப்பின் 13ஆவது உறுப்புரையில் ஒருவரை கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமை தொடர்பில் கூறப்பட்ட விடயங்களையும் மீறியே என்னை பொலிஸார் கைதுசெய்தனர்.

அரச புலனாய்வு பிரிவுக்கு முன்னாள் நான் காணொளியை பதிவு செய்ததாக பொய்யான கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

நான் அரச புலனாய்வு பிரிவுக்கு அருகில் எவ்வித காணொளிளையும் பதிவு செய்யவில்லை.

அரச புலனாய்வு பிரிவு என்பது அரசாங்க நிறுவனமாகும். அங்கு பணியாற்றியவர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்தே ஊதியம் வழங்கப்படுகின்றது.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக பிரஜைகளுக்கு எந்த அரச நிறுவனத்திலும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமை உள்ளது.

அரச புலனாய்வு பிரிவுக்கு ஆவணமொன்றை கையளிப்பதற்காகவே நான் அன்றைய தினம் அங்கு சென்றிருந்தேன்.

என்னை கைதுசெய்ததன் பின்னர் அதிகாரிகள் மிக மோசமாகவே நடந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த பொலிஸாரும் மோசமானவர்கள் என்று நான் கூறவில்லை.

கைதுசெய்யப்படும் போது நான் உடல் உபாதைக்கு உள்ளாகினேன். இதன் காரணமாக பாம் ஒன்றையும் ஐஸ் போத்தல் ஒன்றையும் வாங்கித்தருமாறு கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வைத்து கடமையில் இருந்த அதிகாரிகளிடம் கோரினேன்.

எனினும் ஒருவர்கூட திரும்பிப் பார்க்கவில்லை. மனிதாபிமானற்ற ரீதியிலேயே பொலிஸார் நடந்துகொண்டனர்.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company