மட்டக்களப்பில் தலைமறைவாகி வந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கஞ்சாவுடன் கைது !

மட்டக்களப்பில் தலைமறைவாகி வந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கஞ்சாவுடன் கைது ! (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வீடு ஒன்றில் புகுந்து வாள்வெட்டு  தாக்குதல் மேற்கொண்டு தலைமறைவாகி வந்த இளைஞன் ஒருவரை 950 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 12 ம் திகதி கருவப்பங்கேணியிலுள்ள வீடு ஒன்றில் 3 பேர் வாள்களுடன் உட்புகுந்து  ஒருவர் மீது வாள்வெட்டு hக்குதலை மேற்கொண்டுவிட்டு […]

மட்டக்களப்பில் தலைமறைவாகி வந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கஞ்சாவுடன் கைது !

மட்டக்களப்பில் தலைமறைவாகி வந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கஞ்சாவுடன் கைது !

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வீடு ஒன்றில் புகுந்து வாள்வெட்டு  தாக்குதல் மேற்கொண்டு தலைமறைவாகி வந்த இளைஞன் ஒருவரை 950 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 12 ம் திகதி கருவப்பங்கேணியிலுள்ள வீடு ஒன்றில் 3 பேர் வாள்களுடன் உட்புகுந்து  ஒருவர் மீது வாள்வெட்டு hக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் தாக்குதலில் படுகாயமடைந்தவiர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட முதலாம் இரண்டாம் எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர் இதில் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 3 எதிரியான இளைஞன் தலைமறைவாகி வந்த நிலையில்   நேற்று கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் பல்வேறு குற்றச செயல்களுடன் தொடர்பு பட்டவர் எனவும் இவரின் சகோதரன் தந்தையார் கஞ்சாவியாபரிகளாக செயற்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். [Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company