ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி

சாஸ்திரியார் வீதி, முறக்கொட்டான்சேனையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நாகராசா யோகேந்திரன் (42) என்பவரே ரயிலில் மோதுண்டு மரணமானவராவார், மீன் வியாபாரத்தில் ஈடுபடும் இவர் மாலை வேளைகளில் வீடுவரும்போது மது போதையுடன் வந்து, இரவு நேரங்களில் தனது வீட்டுக்கு முன்பாகவுள்ள புகையிரத பாதையில் சற்று நேரம் இருந்துவிட்டே படுக்கைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சம்பவ தினமான நேற்றிரவு (03/04) 08.00 மணியளவில் அதிக போதையுடன் குறித்த ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த போது, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் ரயில் […]

ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி

சாஸ்திரியார் வீதி, முறக்கொட்டான்சேனையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நாகராசா யோகேந்திரன் (42) என்பவரே ரயிலில் மோதுண்டு மரணமானவராவார்,

மீன் வியாபாரத்தில் ஈடுபடும் இவர் மாலை வேளைகளில் வீடுவரும்போது மது போதையுடன் வந்து, இரவு நேரங்களில் தனது வீட்டுக்கு முன்பாகவுள்ள புகையிரத பாதையில் சற்று நேரம் இருந்துவிட்டே படுக்கைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சம்பவ தினமான நேற்றிரவு (03/04) 08.00 மணியளவில் அதிக போதையுடன் குறித்த ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த போது, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் ரயில் இரவு 08.45 மணியளவில் வருவதை கண்டு எழுந்து செல்ல முயற்சித்தபோதும் ,அதிக போதை சுயகட்டுப்பாட்டை இழக்க வைத்ததால் அவ்விடத்திலேயே ரயிலில் மோதுண்டு தலைப்பகுதி பலமாக தாக்குண்டு மரணமானார்.

சந்திவெளி பொலிஸ் பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.. நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பொலிஸாரை பணித்தார்