விபத்தில் ஒருவர் வபாத்

விபத்தில் ஒருவர் வபாத் – பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று  ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில்   குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் ஓட்டோவில் பிரயாணம் செய்த மேலும் இருவர் படுகாயமடைந்த  நிலையில்  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசiலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம்  ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த   […]

விபத்தில் ஒருவர் வபாத்

விபத்தில் ஒருவர் வபாத்


– பாறுக் ஷிஹான் –

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று  ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இவ்விபத்தில்   குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் ஓட்டோவில் பிரயாணம் செய்த மேலும் இருவர் படுகாயமடைந்த  நிலையில்  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசiலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம்  ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த   மீராமுகைதீன்  பாத்தும்மா (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


விபத்தில் இறந்த பெண்ணின்  அக்கரைப்பற்று  மகளின் வீட்டிற்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக  காரைதீவு  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.


குறித்த விபத்தானது  அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன்  ஆட்டோ ஒன்று  மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company