14 வயது யுவதி கற்பழிப்பு; ஆபாச சேட்டைகளை புரிந்த ஆடவனுக்கு எதிராக குற்றச்சாட்டு

14 வயது யுவதி கற்பழிப்பு; ஆபாச சேட்டைகளை புரிந்த ஆடவனுக்கு எதிராக குற்றச்சாட்டு குவாலா கங்சார், நவம்பர் 17 – 14 வயது யுவதியை கற்பழித்ததோடு, அவரிடம் ஆபாச சேட்டைகளை புரிந்த ஆடவன் ஒருவனுக்கு எதிராக, இன்று குவாலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எனினும், 52 வயது முஹமட் காசிம் அப்துல் வஹாப் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான அக்குற்றங்களை மறுத்து விசாரணை கோரினான். கடந்த மார்ச், 27-ஆம் தேதி, பிற்பகல் மணி […]

14 வயது யுவதி கற்பழிப்பு; ஆபாச சேட்டைகளை புரிந்த ஆடவனுக்கு எதிராக குற்றச்சாட்டு

14 வயது யுவதி கற்பழிப்பு; ஆபாச சேட்டைகளை புரிந்த ஆடவனுக்கு எதிராக குற்றச்சாட்டு

குவாலா கங்சார், நவம்பர் 17 – 14 வயது யுவதியை கற்பழித்ததோடு, அவரிடம் ஆபாச சேட்டைகளை புரிந்த ஆடவன் ஒருவனுக்கு எதிராக, இன்று குவாலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும், 52 வயது முஹமட் காசிம் அப்துல் வஹாப் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான அக்குற்றங்களை மறுத்து விசாரணை கோரினான்.

கடந்த மார்ச், 27-ஆம் தேதி, பிற்பகல் மணி ஒன்று வாக்கில், கிரிக், கம்போங் பெலும் பாரு லவின் கிராமத்திலுள்ள, கெநெரிங் ஆற்றங்கரையில், அவன் 14 வயது யுவதியை கற்பழித்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

அதே இடத்தில், அந்த யுவதியிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக மேலும் இரு குற்றச்சாட்டுகளும் அவனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

அந்த குற்றச்சாட்டுகள் நிரூபனமானால், 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

பத்தாயிரம் ரிங்கிட் உததரவாதத் தொகையிலும், இரு நபர் கள் உத்தரவாததின் பேரிலும் அவனை விடுவிக்க இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இவ்வழக்கு விசாரணை டிசம்பர் 18-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company