4 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சதம் இல்லை – இங்கிலாந்தின் கவலையாகும் ஜோ ரூட்!

4 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சதம் இல்லை – இங்கிலாந்தின் கவலையாகும் ஜோ ரூட்! இங்கிலாந்து அணியின் முன்னிலை வீரர் ஜோ ரூட். அனைத்து வடிவ வீரர் என்றாலும், டி20 சர்வதேச போட்டிகளில் அவர் இப்போதெல்லாம் ஆடுவதில்லை. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோ ரூட் பெரிய தாதா என்று ஏற்கெனவே ஸ்தாபித்து விட்டார். ஒருநாள் போட்டிகளில் 162 போட்டிகளில் 6246 ரன்களை 48.79 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 16 சதங்கள் 36 அரைசதங்கள். ஸ்ட்ரைக் […]

4 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சதம் இல்லை – இங்கிலாந்தின் கவலையாகும் ஜோ ரூட்!

4 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சதம் இல்லை – இங்கிலாந்தின் கவலையாகும் ஜோ ரூட்!

இங்கிலாந்து அணியின் முன்னிலை வீரர் ஜோ ரூட். அனைத்து வடிவ வீரர் என்றாலும், டி20 சர்வதேச போட்டிகளில் அவர் இப்போதெல்லாம் ஆடுவதில்லை. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோ ரூட் பெரிய தாதா என்று ஏற்கெனவே ஸ்தாபித்து விட்டார். ஒருநாள் போட்டிகளில் 162 போட்டிகளில் 6246 ரன்களை 48.79 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 16 சதங்கள் 36 அரைசதங்கள். ஸ்ட்ரைக் ரேட் 86.70. அதிகபட்ச ஸ்கோர் 133 நாட் அவுட். இந்நிலையில் ஜோ ரூட் போன்ற ஒரு வீரர் ஒரு வடிவத்தில் தாதாவாக இருந்து கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் பார்ம் அவுட் ஆகியுள்ளதை நம்ப முடிகிறதா?

ஆம்! ஜோ ரூட் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் எடுத்து 4 ஆண்டுகள் ஆகின்றன. 2019-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் 100 ரன்கள் எடுத்ததே ஜோ ரூட் எடுத்த கடைசி சதம். அதன் பிறகு 88, 79, கடைசியாக 86 ரன்களை எடுத்ததே சதத்துக்கு நெருக்கமாக அவர் எடுத்த ஸ்கோர்களாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1, 39,0, இந்தியாவுக்கு எதிராக 0, 11, 0. சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 6,0,4, 29.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company